மட்டக்களப்பு, பதுளை வீதியை அண்டியுள்ள உறுகாமம் புதூர் குளத்தில் விழுந்து 7 பிள்ளைகளின் தந்தையான மீனவரொருவர் மரணித்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
உறுகாமம் புதூர் கிராமத்தில் வசிக்கும் அப்துல் காதர் அப்துல் ஸலாம் (58) எனும் 7 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மரணித்துள்ளார்.
வழமைபோன்று அவர் உறுகாமம் புதூர் குளத்தில் இரவு நேர மீன்பிடிக்காக புதன்கிழமை இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து குளத்திற்குச் சென்றுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் மீனவர் குளத்தில் சடலமாக மிதப்பதை கண்டு சக மீனவர்கள் கண்டு சடலத்தை மீட்டெடுத்துள்ளனர்.
இது பற்றி கரடியனாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சடலம் உடற்கூறாய்வின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.