வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,
இன்றைய தினம் மதியம் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வருகை தந்த கென்ரர் ரக வாகனம் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் கென்ரர் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்திற்குள்ளான வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்களில் பயணித்த நபர்கள் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.