படுகாயமடைந்த நிலையில் தண்டவாளத்தின் நடுவில் கிடந்த பெண் நாய் ஒன்றை ஆண் நாய் ஒன்று ரயிலில் ரயிலில் அடிபடாமல் இரு நாட்களாக பாதுகாத்த சம்பவம் ஒன்று உக்ரைனில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உக்ரைனில் காயமுற்று தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட லுஸி எனும் நாயை அதன் துணை நாயானபண்டா இரண்டு நாளாக பாதுகாத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமைக்கான காணொளி வெளியாகி அணைவரையும் நெகிழவைத்துள்ளது.
டெனிஸ் மலாப்பேயெவ் என்பவர் உக்ரைனின் டிசெக்லொவ்கா பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தின் காணொளியை பதிவு செய்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக டெனிஸ் குறிப்பிட்டுள்ளதாவது, லுஸி எனும் பெண் நாய் அடிபட்ட
நிலையில் ரயில் தண்டவாளத்தின் மேல் விழுந்து வலியால் துடித்து கொண்டிருந்தது. இதன்போர் இதற்கு பக்கத்தில் அதன் ஆண் துணையான பண்டா நின்று ரயிலில் மோதாமல் காக்க ஒவ்வொரு முறை ரயில் குறித்த
தண்டவாளத்தை கடக்கும் போதும் அடிபட்ட தனது ஜோடி நாயை தரையில் அமுத்துகின்றது.
இவ்வாறு பனிப்பொழிவு மிகுந்த இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த காணொளி வெளிவரவே குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர் இரண்டு நாய்களையும் மீட்டு சிகிச்சை அளித்ததோடு நாயின் உரிமையாளரிடம் அவற்றைக் கையளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.