Edge எனப்படும் 2G தொழில்நுட்பத்துடன் சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட கைப்பேசிகளின் பட்டரிகள் இரண்டு தொடக்கம் மூன்று நாட்கள் வரைக்கும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.
அதன் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட 3G, 4G மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பங்களைக் கொண்ட கைப்பேசிகளின் பட்டரி பாவனையானது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
இப்படியிருக்கையில் தற்போது 5G ஸ்மார்ட் கைப்பேசிகளும் அறிமுகமாக ஆரம்பித்துள்ளன.
இந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனம் iPhone 12 மற்றும் 12 Pro போன்ற 5G கைப்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது.
இவற்றிலும் பட்டரி பாவனையானது மிகவும் குறைவாகவே இருக்கும்.
எனவே இதற்கு தீர்வாக LTE எனும் வசதியினைப் பயன்படுத்துவதன் மூலம் பட்டரி பாவனையை ஓரளவிற்கு அதிகரிக்க முடியும்.
LTE என்பது வலையமைப்பினை தெரிவுகளுள் ஒன்றாகும்.
அதவது iPhone 12 மற்றும் 12 Pro ஆகியவற்றில் 5G Auto, 5G On மற்றும் LTE ஆகிய மூன்று வலையமைப்பு தெரிவுகள் காணப்படுகின்றன.
இவற்றில் LTE என்பது 4G வலையமைப்பாகும்.
இதனை தெரிவு செய்தால் 5G வலையமைப்பு காணப்பட்டாலும் எப்போதும் 4G வலையமைப்பிலேயே செயற்படும்.
இது பட்டரி பாவனையை சீராக பேண உதவும்.
அதிவேக இணைய செயற்பாடுகள் தேவை இல்லை எனின் இவ் வசதியினை தெரிவு செய்து பட்டரி பாவனையை அதிகரிக்க முடியும்.
5G Auto ஆனது ஒருவர் இருக்கும் இடத்தில் காணப்படும் வலையமைப்பு வகைக்கு ஏற்ப தானாவே மாற்றமடைந்து செயற்படக்கூடியது.
இம் முறையிலும் ஓரளவிற்கு பட்டரி பாவனையை பாதுகாக்க முடியும்.
எனினும் 5G On என்பது எப்போதுமே 5G வலையமைப்பில் மாத்திரமே இணைந்திருக்கும்.
இதனால் பட்டரி பாவனையானது வெகுவாக பாதிக்கப்படுகின்றது.
இம் மாற்றத்தினை மேற்கொள்வதற்கு ஐபோனில் உள்ள Settings அப்பிளிக்கேஷனை ஓப்பின் செய்ய வேண்டும்.
தொடர்ந்து Mobile/Cellular என்பதை தெரிவு செய்து Mobile/Cellular Data Options என்பதை கிளிக் செய்யவும்.
அதன் பின்னர் தோன்றும் Voice & Data பக்கத்தில் இம் மூன்று வசதிகளும் காணப்படும்.
அவற்றில் விரும்பியதை தேவைக்கு ஏற்றாற்போல் தெரிவு செய்ய முடியும்.