இரவு நேரத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் சத்தானதாக இருக்க வேண்டியது அவசியம்.
அதே போல அதிக கொழுப்புகள் மற்றும் எண்ணெய் உணவுகளை இரவு நேரத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் சில உணவுகளை இரவில் சாப்பிட்டால் அது செரிமானம் ஆகாததோடு தேவையில்லாத பாதிப்பை உடலுக்கு ஏற்படுத்தும்.
இரவு நேரத்தில் சாப்பிட கூடாத உணவுகள்
கீரை
கீரையை இரவு உணவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், இரவில் கீரையை எடுத்துக்கொள்வதால் உடலுக்கு, தேவைக்கும் அதிகமான கலோரி கிடைக்கிறது. அதிக கலோரி வயிற்றை அசெளகர்யம் அடையச்செய்கிறது.
இரவு நேரத்தில் முழு சாப்பாடு, அதிகப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
இறைச்சி
இறைச்சியில் அதிக அளவிலான புரோட்டினும் கொழுப்புச்சத்தும் உள்ளன. எனவே, இதைச் செரிக்க அதிக ஆற்றல் தேவை என்ற நிலையில் அது இரவில் கிடைக்காது, இதனால் வாயு தொல்லை ஏற்படலாம்.
பால்
இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
நூடூல்ஸ்
இரவில் நூடூல்ஸ், மேகி போன்ற துரித உணவுகளை கண்டிப்பாக சாப்பிடாமல் இருப்பது நலம் பெயர்க்கும்.