சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகள் காதலிப்பதும், லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதும் ஒன்றும் பெரிய விஷயமல்ல.இப்படித்தான் அடிக்கடி ஓட்டல்களில் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர் அனிருத் மற்றும் ஆண்ட்ரியா. இது ஊர் அறிந்த கதைதான். அனிருத், ஆண்ட்ரியா இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த புகைப்படங்கள் சுசி லீக்ஸ் என்ற பெயரில் வெளியாகி செம வைரல் ஆனது.
அனிருத், ஆண்ட்ரியா மட்டுமல்லாமல் பல நடிகர் நடிகைகள் அந்த பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னம் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அனிருத் மற்றும் ஆண்ட்ரியா விஷயம் ரோட்டுக்கு வர உடனடியாக இருவரும் சந்திப்பதை நிறுத்திக் கொண்டார்களாம். மேலும் போனில் கூட பேசிக் கொள்வது இல்லையாம். இந்நிலையில் தன்னுடைய காதலை புதுப்பிக்கும் வகையில் அனிருத் பிரபல நடிகர் ஒருவரின் படத்திற்கு பாட்டு பாடுமாறு ஆண்ட்ரியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் வாய்ப்பில்ல ராஜா என உசாராக ஒதுங்கிக் கொண்டாராம் ஆண்ட்ரியா. இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் முன்னணி பத்திரிகை ஒன்றின் யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.