பல பெண்களை காதல் வலைவீசி ஏமாற்றிய காதல் மன்னன் காசியின் வழக்கில் திடீர் திருப்பமாக தடயங்களை அழித்ததாக அவரது தந்தையின் பெயரையும் குற்றவாளி பட்டியலில் போலீசார் சேர்த்துள்ளனர்.
பள்ளி கல்லூரி மாணவிகள். இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் போன்றோரை சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பு கொண்டு நட்பாக பழகியவர் நாகர்கோவிலை சேர்ந்த காசி. தனது கட்டுமஸ்தான உடலை காட்டி நட்பாக பழகியவர்களை காதல் வலையில் சிக்கவைப்பது அவரது பாணி. பணக்கார பெண்களை மட்டும் குறிவைக்கும் காசி , காதலில் சிக்கும் பெண்களை உருகி காதலிப்பது போன்று நடித்து அவர்களிடம் உல்லாசம் அனுபவிப்பார்.
பெண்களுடன் தனிமையில் இருப்பதை நண்பர்கள் உதவியுடன் பெண்களுக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்யும் காசி வீடியோவை வைத்து பெண்களை பணம் கேட்டு மிரட்டுவார். இது போன்று காசியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் ஏப்ரல் 24 ஆம் தேதி காசி கைது செய்யப்பட்டார். கந்துவட்டி கொடுத்து மிரட்டுவது மற்றும் ஆறு பெண்கள் கொடுத்த பாலியல் மோசடி வழக்குகள் என மொத்தம் ஏழு வழக்குகள் காசி மீது பதியப்பட்டுள்ளது.
80-க்கும் மேற்பட்ட பெண்களை காசி ஏமாற்றியிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்தது. வழக்கின் தன்மையை கொண்டு மே 27 ஆம் தேதி காசி மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் காசியின் ரகசிய லேப்டப்பில் தான் அனைத்து வீடியோக்களும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தேடிய நிலையில் ரகசிய லேப்டாப் ஒரு கோழிப்பண்ணையில் இருந்து மீட்கப்பட்டது. ஆனால் மீட்கப்பட்ட லேப்டாப்பில் இருந்த வீடியோ ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்தன
அதிர்ச்சியடைந்த போலீசார் நடத்திய விசாரணையில் காசியின் தந்தை லேப்டாப்பில் இருந்த வீடியோ ஆதாரங்களை அழித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து காசியின் தந்தை ஜூன் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் காசி மீது பதியப்பட்ட நான்கு பெண்கள் ஏமாற்று வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக அவரது தந்தையின் பெயரையும் சிபிசிஐடி போலீசார் தற்போது சேர்த்துள்ளனர். தனிப்படை அமைத்து லேப்டாப்பில் அழிக்கப்பட்ட ஆதாரங்களை மீட்ட போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்