இந்திய அணியில் ரோகித்சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.
ஐக்கியர் அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ரோகித் தலைமையிலான மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது.
கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி இந்த முறையும் பிளே ஆப் சுற்றோடு வெளியேறியது.
இதையடுத்து ரோகித்தை இந்தியாவின் டி 20 தொடருக்கான கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர், கோஹ்லி இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கோஹ்லி விளையாடத் தொடங்கிய நான்கு வருட காலத்திலேயே கேப்டன் பதவி வந்து விட்டதால் அவர் மீது அதிக பாரம் இருப்பதாக நான் உணர்கிறேன். அந்த வேலை பளுவைக் குறைப்பதற்காக குறைந்தபட்சம் டி20 போட்டிகளில் ஆவது அவருக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.
அவருக்குப் பதில் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம். இது விராட் கோலிக்கு உதவியாக இருக்கும். ஐபிஎல் தொடரின் மூலம் ரோகித் சர்மா தன்னை ஒரு மிகச்சிறந்த கேப்டனாக நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் கோப்பையை வென்று அசத்திக் கொண்டிருக்கிருப்பதாக தெரிவித்தார்.