நயன்தாரா, தமன்னா இருவரும் இன்று சினிமாவில் டாப்பில் பறக்கும் நடிகைகள். பெயர், புகழ், பணம் என அதிகம் சம்பாதித்துள்ளார்கள் இவர்கள். இந்நிலையில் இவர்களை மட்டுமல்லாது அனைத்து நடிகைகளையும் கொச்சை படுத்துவது போல தரக்குறைவாக பேசியுள்ளார் இயக்குனர் சுராஜ்.
சமீபத்தில் வெளியான கத்தி சண்டை படத்தின் இயக்குனர் ஓரு ஊடக பேட்டியில் நடிகைகளை பணம் கொடுத்து நடிக்க வைக்கிறோம்.
கமெர்சியல் படம் என்றால் நடிகைகள் கிளாமராக தான் நடிக்க வேண்டும். எல்லோரையும் திருப்தி படுத்தவேண்டும். இல்லையெனில் கோடி ரூபாய் கொட்டி படம் எடுப்பவர்கள் என்னை கேட்பார்கள்.
மேலும் நடிகைகள் சில காட்சிகளில் மிகவும் இறங்கி நடித்து அந்த உணர்ச்சியேற்ற வேண்டும் என கொச்சையாக பேசியுள்ளார். அப்படியான சீன்களை என் படங்களில் நான் எடுத்து அதை கடைசியில் கட் செய்து விடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். சேலை கட்டி முழுமையாய் உடலை மறைத்து நடிக்க மற்ற படங்களில் போய் நடிக்க சொல்லுங்கள்.
இதில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என இயக்குனர் சுராஜ் கூறியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ரிவீட் கொடுத்தது போல நடிகை நயந்தாரா பெண்களுக்கு மதிப்பு கொடுத்து ‘பிங், தங்கல் என்று பெண்களுக்கு பெருமை சேர்க்கும் படங்கள் வந்திருக்கிறது,
இது மாதிரியான படத்தை சுராஜ் எடுத்து விட்டாரா ? கமர்ஷியல் படம் என்றாலும் ஹீரோயினுக்கு சம்மதம் என்றால் தான் கிளமராக நடிப்பார்கள். பணத்திற்காக கிளாமராக நடிக்க வேண்டும் என்று அவர் சொன்ன வார்த்தையை நான் மிகவும் வெறுக்கிறேன்.
பி, சி செண்டர் ஆடியன்ஸ் இதை தான் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது முற்றிலும் தவறு’ என்று கூறியுள்ளார். மேலும் தமன்னா பேசிய போது என்னுடைய இயக்குனர் பேசியது வருத்தமாக இருக்கிறது. 11 வருடங்கள் சினிமாவில் உழைத்திருக்கிறேன்.
அவர் சொல்லிய வார்த்தைக்கு என்னிடம் மட்டுமல்ல எல்லா பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் கூறினார். நயன்தாரா, தமன்னா பதிலடிக்கு நடிகர் சாந்தனு, பாடகி சின்மயி, டிவி புகழ் டி டி ஆகியோர் வரவேற்றுள்ளனர்.