நடிகர் பிரபுதேவா ஹிமாமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என அவரின் அண்ணன் ராஜூசுந்தரம் கூறியுள்ளார்.
இந்திய திரையுலகில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும், வலம் வருபவர் பிரபுதேவா.
இவருக்கும் ரமலதா என்ற பெண்ணுக்கும் 1995ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது, பின்னர் 2009 காலக்கட்டத்தில் நடிகை நயன்தாராவுடன் காதல் வயப்பட்ட பிரபுதேவா லிவிங் டூ கெதர் வாழ்ந்தார்.
இதனால் மனைவியுடன் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதை தொடர்ந்து ரமலதாவை பிரபுதேவா விவாகரத்து செய்தார். மேலும் நயன்தாராவையும் பிரிந்தார்.
இந்த நிலையில் பிரபுதேவா சமீபத்தில் ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார் என செய்திகள் பரவின.
ஆனால் அப்பெண்ணின் பெயர் மற்றும் இருவருக்கும் எப்போதும் திருமணம் ஆனது என்பது தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் பிரபுதேவா மருத்துவர் ஹிமாமி என்ற பெண்ணை மணந்தது கொண்டது உறுதியாகியுள்ளது.
இதனை அவர் சகோதரரான ராஜூசுந்தரம் உறுதி செய்துள்ளார். இருவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்துள்ளது.
பிரபுதேவாவுக்கு கால்கள் மற்றும் முதுகில் பிரச்சினை ஏற்பட்டது போது மருத்துவர் ஹிமாமி தான் அவருக்கு சிகிச்சையளித்துள்ளார்.
அப்போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இதையடுத்தே சென்னையில் உள்ள பிரபுதேவா வீட்டில் அவருக்கு திருமணம் நடந்துள்ளது. பிரபுதேவாவுக்கு திருமணம் நடந்தது மகிழ்ச்சியளிப்பதாக ராஜூசுந்தரம் கூறியுள்ளார்.