தற்போதைய காலத்தில், உடல் பருமன் பிரச்சனை என்பது ஏராளமான மக்கள் கஷ்ட்டப்படும் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே இந்த உடல் பருமனைக் குறைக்க பலரும் பலவிதமான டயட் மற்றும் ஜிம்களில் கடுமையான உடற்பயிற்சிகள் போன்ற முயற்சிகளை செய்து வருகிறார்கள்.
இவர்களில், இன்னும் சிலபேர்கள் உடல் பருமனைக் குறைக்க கடுமையாக பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல், எளிய வழிகளின் மூலம் தங்களின் உடல் எடையைக் குறைக்க விரும்புகின்றார்கள்.
உடல் எடையை குறைக்க உணவு பொருட்களை சேர்ந்த கொத்தமல்லியை போல இருக்கும் நீர்ப் பெருக்கி பண்புகளைக் கொண்ட பார்ஸ்லி என்ற மூலிகை பெரிதளவில் பயன்படுகிறது. இது நமது உடலின் உள்ளுறுப்புக்களைச் சுத்தம் செய்து, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்களை கரைத்து, சிறுநீரின் வழியே வெளியேற்றுகிறது.
மூன்றே நாட்களில் ஐந்து கிலோ வரை உடல் எடையை குறைக்கும் அற்புதமான மூலிகை குணத்தை கொண்டுள்ள பார்ஸ்லி டீ இதோ!
தேவையான பொருட்கள்
பார்ஸ்லி – 5 நறுக்கியது, தண்ணீர்- 1 லிட்டர்
தயாரிக்கும் முறை
முதலில் 1 லிட்டர் நீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து, பின் அதில் நறுக்கி வைத்துள்ள பார்ஸ்லியை சேர்த்து இறக்கி, 20 நிமிடம் வரை ஊற வைத்து, பின் வடிகட்டி குடிக்க வேண்டும்.
நன்மைகள்
பார்ஸ்லி மூலிகை டீயை தினமும் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் அளவு குடிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 1 லிட்டருக்கு மேல் இந்த டீயை குடிக்கக் கூடாது. இதனால் அதிக உடல் எடை வேகமாக குறைந்து, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
பார்ஸ்லி மூலிகையானது, ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போல செயல்பட்டு, நமது உடலில் உள்ள ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, புற்றுநோய் போன்ற தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.