இந்திய கிரிகெக்ட் அணி வீரர் முகமது சிராஜின் தந்தை காலமான நிலையில் இறுதிச்சடங்குக்கு செல்ல முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது.
சிராஜின் தந்தைக்கு நுரையீரலில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஹைதராபாத்தில் மரணமடைந்ந்தார்.
அவுஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் குவாரன்டைனில் இருக்கிறார் சிராஜ். அவரால் தந்தையின் இறுதிச் சடங்கிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியா தங்கி இருக்கும் சிட்னி நகரம் உட்பட தெற்கு அவுஸ்திரேலியாவில் கடும் லாக்டவுன் விதிகள் கடந்த சில நாட்களாக அமுலில் உள்ளது.
இந்த நிலையில், முகமது சிராஜ் இந்தியா கிளம்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தன் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க செல்ல முடியாமல் தவிக்கும் அவருக்கு கேப்டன் கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆறுதல் கூறி சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் துவங்கி உள்ளதால் கடும் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது.
அதனால், அவர் தன் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்தியா செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.