பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் மலேரியா, கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் அவரை ராஜநாகம் கடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த இயன் ஜோன்ஸ் என்பவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தங்கியுள்ளார். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானது.
தற்போது அதில் இருந்து மீண்டு வந்து நலமாக உள்ளார். இதற்கு முன்னதாக, டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களாலும் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். அனைத்து நோய்களையும் மன உறுதியுடன் எதிர்கொண்டு மீண்டு வந்தவருக்கு மேலும் ஒரு பிரச்சனை காத்திருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை விஷமிக்க ராஜநாகம் ஒன்று கடித்துள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அதில் தொற்று உறுதியாவில்லை. பார்வை மங்குதல், நடப்பதில் சிரமம் என பாம்பு கடித்ததற்கான அறிகுறிகளே அவருக்கு காணப்பட்டுள்ளன.
ஆனால் அவர் எதையும் கண்டு அஞ்சவில்லை என்பது தான் ஆச்சரியம், பாம்பு கடியை தைரியமுடன் எதிர்கொண்டு மருத்துவ சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார். தற்போது அவர் அந்த பாதிப்பில் இருந்தும் மீண்டு வந்துள்ளார்.
அவரது மருத்துவ சிகிச்சைக்கான செலவு மற்றும் மீண்டும் பிரித்தானியா திரும்புவதற்கான செலவுக்கு நிதியுதவி கேட்டு, அவரது மகன் இணையதள பக்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.