பிரிட்டனில் அதிகரித்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் எதிர்வரும் டிசம்பர் 2-ம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவர பொரிஸ் ஜோன்ஸன் தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரிட்டனில், கடந்த மார்ச் மாதத்தில் தீவிரமாக பரவிய தொற்று, ஜூன் மாதத்தில் ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து, பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில், தற்போது 2வது அலை பரவத்தொடங்கியதால், பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், மீண்டும் பொதுமுடக்கத்தை அமுல்படுத்தினார்.
இந்த பொதுமுடக்கம், நவ.,5ம் திகதி முதல் டிச.,2ம் திகதி வரை இருக்கும் எனவும் உத்தரவிட்டார்.
தற்போது வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து டிச., 2ம் திகதியுடன் பொதுமுடக்கத்தை முடித்துக்கொள்ள அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
அதேநேரத்தில் மாகாண அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பொரிஸ் ஜோன்சன் வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.