தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைவுக்கு பின்னர் அவர் குறித்த சர்சைகளுக்கும், மர்மங்களுக்கும் பஞ்சமில்லை என்றே கூறவேண்டும்.
அத்துடன், ஜெயலலிதாவின் மரணத்திற்கு தமிழக அரசியலில் பெரும் மாற்றம் கண்டுள்ளது என்றே கூறவேண்டும். குறிப்பாக இன்றைய தினம் அதிமுக அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெயலிலதாவின் மரணத்துக்கு பின்னர், நாளுக்கு நாள் அவரின் மரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றது.
ஜெயலிலதாவின் மரணத்தில் பல விடயங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து புலானாய்வு விசாரணை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் பழனியில் தியானம் கற்றுக்கொடுக்கும் அசோக் ஜி என்பவர் தற்போது சர்ச்சையை ஏற்படுத்து விதத்தில் ஆரூடம் ஒன்றை கூறியுள்ளார்.
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசோக் ஜி என்பவர் ஏற்கனவே எப்போதெல்லாம் ஜெயலலிதா வெற்றி பெருவார் என சொல்லிருக்கிறாரோ அப்போதெல்லாம் ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
அத்துடன், கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளம் குறித்து முன்கூட்டியே எதிர்வு கூறியிருந்த நிலையில், தற்போது அவரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆத்மா தீராத கோபத்துடன், இருப்பதாகவும், அவரை அவமானப்படுத்தியவர்களையும், பழிவாங்கியவர்களையும் விடாது எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஆகம விதிப்படி ஜெயலலிதாவின் குடும்பத்தில் சடங்குகள் எதுவும் செய்யாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் சொத்துக்களை அபகரிக்க முற்படுபவர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு எனவும், அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, பிரேமானந்தா, காஞ்சி பெரியவர் ஆகியோர் கைது செய்யப்பட்ட போது ஜெயலலிதா தோற்றுப்போவார் என நான் கூறியிருந்தேன். அதன் காரணமாக தனக்கு கொலை மிரட்டல்களும் வந்தன.
எனினும், நான் கூறியது போல ஜெயலலிதா தோல்வியடைந்தார். இந்நிலையில், 2023ஆம் ஆண்டு வரையிலும், பழிவாங்கும் படலம் தொடரும் என குறிப்பிட்டுள்ள அவர் இன்னும் ஆறு ஆண்டுகளில் ஜெயலலிதா மறு பிறவி எடுப்பார் எனவும் கூறியுள்ளார்.
மேலும், இதனை தான் நிரூபித்து காட்டுவதாகவும், இதனால் தனக்கு கொலை அச்சுறுதல் வந்தாலும் பரவாயில்லை நடக்க போவதை கூறவேண்டியது எனது கடமை என அசோக் ஜி குறிப்பிட்டுள்ளார்.