இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வெளிநாட்டு செய்தியாளருக்கு அளித்து உள்ள பேட்டியில், “இலங்கைக்கு சீனாவின் நீர்மூழ்கி கப்பல்கள் வந்தபோது, என்னுடைய இந்திய நண்பர்கள் எனக்கு எதிராக எழுந்தனர். ஆனால் இப்போது அவர்கள் எலிகளை போன்று அமைதியாக உள்ளனர்,” என்று கூறிஉள்ளார் ராஜபக்சே.
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்புக்கு இந்தியாவே கவலைப்படாத நிலையில் எந்த அடிப்படையில் நீங்கள் இதனை கூறுகிறீகள் என்ற கேள்விக்கு பதிலளித்து உள்ள ராஜபக்சே, “அவர்கள் வெளிப்படையாகவே இதனை (எதிர்ப்பு) தெரிவித்தனர்.” என்றார்.
மேலும் பேசுகையில் என்னுடைய சொந்த ஊரான ஹம்மன்தோடாவில் தொழில்துறை மையம் அமைக்க சீனாவிற்கு 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்குவதற்கு எதிராக இருந்தேன். நாங்கள் தொழிற் பூங்கா அமைப்பதை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 15 ஆயிரம் ஏக்கர் என்பது மிகவும் அதிகமானது என்று கூறி உள்ளார். மைத்திரிபால சிறிசேனா அரசானது திரிகோணமலை துறைமுகம் அல்லது பலாலி விமான நிலையத்தை அவர்களிடம் கொடுப்பதை இந்தியா காத்திருந்து காணதான் போகிறது என்று நினைப்பதாக ராஜபக்சே கூறி உள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இந்தியா எனக்கு உதவிசெய்தது என்ற கூறிய ராஜபக்சே, அமெரிக்காவின் தலையீட்டினால் எனக்கு எதிராக செயல்பட்டது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
நான் அவர்கள் (இந்தியா) என்னுடன் வரவேண்டும் என விரும்பினேன் (தீவிரமான ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு) ஆனால் அவர்கள் தென் இந்தியாவின் அணுகுமுறை காரணமாக விரும்பவில்லை. மேற்கத்திய நாடுகள், இந்தியாவின் உளவுப்பிரிவு மற்றும் பிறர் எனக்கு எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டது. அவர்கள் 2015- ஜனவரி அதிபர் தேர்தலுக்கு இரு வருடங்களுக்கு முன்னதாக செயல்பட தொடங்கிவிட்டனர் என்று கூறி உள்ளார் ராஜாபக்சே. இலங்கையில் அதிபர் தேர்தலானது இரு வருடங்களுக்கு முன்னதாகவே நடைபெற்றது.