கார்-த்திகை பூவை காட்சிப்-படுத்துவதையும் தடைசெய்யுமாறு பொலிசார் சார்பில் யாழ்-ப்பாண நீதிவான் நீதிமன்ற-த்தில் பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவீரர்-தினத்தில் உயிரிழந்தவர்களிற்கான அஞ்சலி நிகழ்வை நடத்தக்கூடாதென 38 பேருக்கு தடைஉத்தரவு பிறப்பிக்க கோரி யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிசார் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணை யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.
நேற்று இந்த விசாரணை நடந்தபோது, நினைவேந்தல் நிகழ்விற்கு தடைவிதிப்பதுடன், புலிகளின் சின்னங்களை காட்சிப்படுத்துவதையும் தடைசெய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதன் போது, கார்த்திகை பூவை காட்சிப்படுத்துவதையும் தடைசெய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் தமிழர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் யாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லையென சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த மண்ணின் மலர் என்றும், தடை விதிக்கப்பட்டால் சாதாரண மக்கள் அந்த மலரைசட்டவிரோதமானதாக கருதும் நிலைமை ஏற்பட்டு, அழிவடையும் நிலைமைக்கும் செல்லலாமென சுட்டிக்காட்டப்படுகிறது.