நாட்டை அழித்த புலிகளின் மாவீரர்தினத்தை வடக்கில் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், ஒரு அறிக்கைக்காக பௌத்த பிக்குவிடம் சிஐடி 24 மணித்தியாலத்தில் அறிக்கை பெறுகிறது. இந்த நாட்டில் ஒரே சட்டமா நடைமுறையில் உள்ளதா என கேட்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ளார் சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் அக்மீமன தயாரதன தேரர்.
அவர் நேற்று தெஹிவளையில் செய்தியாளர்களிடம் பேசியபோது-
அரசாங்கத்தை சரியான பாதையில் வழிநடத்துவதும் தவறான விஷயங்களை சுட்டிக்காட்டுவதும் பௌத்த பிக்குகளினதும், தேசிய அமைப்புகளினதும் கடமை. ஆனால் அதை பொறுத்துக் கொள்ளாமல் அவர்களை அடக்குமுறை மூலம் பணிய வைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி கடுமையான தவறு.
இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது, ஒரே நாடு, ஒரே சட்டம் என அரசாங்கம் கூறுகிறது. தேரர் ஒருவரின் அறிக்கைக்காக அவரிடம் 24 மணித்தியாலத்தில் வாக்குமூலம் பெற சி.ஐ.டி நடவடிக்கையெடுத்தது.
ஆனால் வடக்கில் தமிழர்கள் இந்த நாட்டை அழித்த மாவீரர்தினத்தை கொண்டாடி விடுதலைப் புலிகளை நினைவுகூர்கிறார்கள். சுமந்திரன் மாவீரர் தினத்தை கொண்டாடுகிறார். அவர் நாட்டு சட்டத்தை மீறுகிறார்.
ஒரு ஒற்றையாட்சி நாட்டில் நடைமுறையில் உள்ள பொதுவான சட்டத்தைத் தவிர, தமிழ் மக்களுக்கு ஒரு தனி சட்டம், முஸ்லிம்களுக்கு ஒரு தனி சட்டம், சிங்கள மக்களுக்கு மற்றொரு சட்டமா என்று சட்ட வல்லுநர்கள் இன்று எங்களிடம் கேட்கிறார்கள்.
தற்போதைய நிலவரத்தின்படி, சக்தி இல்லாதபோது இருந்த மூளை சக்தி இருக்கும்போது மூளை இல்லாததைப் போலவே செயல்படுகிறது என்று நாங்கள் உணர்கிறோம் என்றார்.