வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியயெடுத்து வைக்கும் நாள். நினைத்ததை முடித்து நிம்மதி காண்பீர்கள். நண்பர்கள் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். உடல் நலம் சீராகும்.
வம்பு, வழக்குகள் தீர வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டிய நாள். அலுவலகப் பணிகளில் சில அல்லல்கள் ஏற்படலாம். மருந்து, மாத்திரைகள் வாங்க கணிசமான பணத்தை செலவிட நேரிடலாம்.
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறலாம். தொழில் முன்னேற்றத்திற்கு நண் பர்கள் உறுதுணையாக இருப்பர்.
தன்னம்பிக்கையும் தைரியமும் ஆதிகரிக்கும் நாள். நேற்று பாதியில் நின்ற பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். கடன் சுமை குறையும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
நிதி நிலை உயரும் நாள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். பொதுக் காரியங் களில் ஈடுபட்டு புகழ் சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
யோகமான நாள். வசதி வாய்ப்பு களை பெருக்கிக் கொள்ள முன் வரு வீர்கள். தாய்வழி ஆதரவு பெருகும். தொழில் உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
வழக்குகளில் வெற்றி கிட்டும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவர்.
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள்.
அனுசரித்துச் செல்வதன் மூலம் ஆதாயம் காணும் நாள். நேற்றைய பணியொன்று இன்றும் தொடரும். ஆரோக்யத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்பச் சுமை கூடும்.
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீண் பிடிவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பயணமொன்றில் பதட் டம், படபடப்புத் தோன்றி மறையும். நண்பர்களுக்காக வெளியிடங்களில் காத்திருக்க நேரிடலாம்.
மனதில் சந்தோஷம் குடி கொள்ளும் நாள். பொருளாதார நிலையை உயர்த்த புது முயற்சி களில் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் உங்களுக்குக் கைகொடுத்து உதவ முன் வருவர்.
நினைத்தது நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழி யமைத்துக் கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இல்லத்தி னர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொது வாழ்வில் புகழ் கூடும்.