இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் நேற்றைய தினம் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பாடசாலைக்கு வந்த ஒரே குடும்பத்ததை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான வைத்தியர் வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.
அதன்படி ,அம்பலங்கொட திலகபுர பிரதேசத்தை சேர்ந்த பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் ஒருவர் வீட்டிற்கு வந்த நிலையில், வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டதாக அம்பலங்கொட பொது சுகாதார பரிசோதர் தெரிவித்துள்ளார்.
அந்நிலையில் நேற்றைய தினம் பாடசாலைகள் திறக்கப்பட்டமையால் அவரது பிள்ளைகள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் நேற்று பிற்பகல் திடீர் சுகயீனமடைந்தமையினால் அவர் இது தொடர்பில் பிரதேச பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அவர் உடனடியாக அம்பியுலன்ஸ் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதியாகியுள்ள நிலையில் அவரது மனைவிக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.
அதற்கமைய அம்பலங்கொட பிரதேசத்தின் பிரதான பாடசாலை இரண்டில் 9 மற்றும் 11 வகுப்புகளில் கல்வி கற்கும் இந்த பிள்ளைகள் இருவரும் நேற்று பாடசாலைக்கு சென்றுள்ளனர்.
இதனால் குறித்த இரண்டு பிள்ளைகளும் கற்ற இரண்டு வகுப்பறைகளின் மாணவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான வைத்தியர் வெனுர கே.சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், இதனால் குறித்த இரண்டு பிள்ளைகளும் கற்ற இரண்டு வகுப்பறைகளின் மாணவர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான வைத்தியர் வெனுர கே.சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.