தமிழகத்தின் சென்னையில் 5 ஆண்டுக்கு பின் செம்பரபாக்கம் ஏரி திறக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்ய கொட்டும் மழையில் குடைப்பிடித்தப்படி முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி முதற்கட்டமாக செம்பரபாக்கம் ஏரியின் 1000 அடி கன நீர் திறக்கப்பட்டன.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தமுள்ள 19 மதகுகளில், தற்போது 7 மதகுகள் வழியாக 1,000 கன அடி நீர் தற்போது நீர் திறக்கப்பட்டது.
இதனையடுத்து, அவர் அளித்த பேட்டியில்,
நிவர் புயல் காரணமாக சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, தஞ்சை, திருவாரூர், காஞ்சி, சென்னை, நாகை, கடலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.