சிறீலங்காவின் மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறியின் வீடு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
சிறீலங்காவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கச் செலவில் அதி சொகுசு வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் இரா.சம்பந்தனுக்கு இதுவரை அவ்வாறான வீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை.
அவர் கொழும்பிலுள்ள தொடர்மாடி வீடொன்றிலேயே வசித்து வருகின்றார். இந்நிலையில் இது தொடர்பாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கையில், அதி சொகுசு வீடுகள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டன, வெகு விரைவில், எதிர்க்கட்சித் தலைவருக்கான அதிசொகுசு வீடு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, மறைந்த முன்னாள் பிரதமருக்கு வழங்கப்பட்டிருந்த, கொழும்பு 07, விஜேராம வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை, அவரது இறுதிக் கிரியைகள் நிறைவடைந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.