திருகோணமலை- கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியை பீங்கானால் அடித்து கொலை செய்த கணவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இத்தீர்ப்பை நேற்று (25) பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு 10 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டவர் கோமரங்கடவல- அடம்பன பகுதியைச் சேர்ந்த உபசேனாகே நந்தசிறி (49 வயது) எனவும் தெரியவருகின்றது.
2014 ஆம் ஆண்டு 4 மாதம் 11 ஆம் திகதி இரண்டாவது மனைவியான தயாவதி என்பவருடைய முதல் கணவரின் மகன் வீட்டுக்கு வருவதினால் அவரை வரவேண்டாம் என இரண்டாவது கணவரான உபசேனாகே நந்தசிறி என்பவர் தனது மனைவிக்கு கூறியுள்ளார்.
இந்நிலையில் கணவருக்கும் மனைவிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகவும் இதே நேரம் குறித்த எதிரி மது போதையில் இருந்ததாகவும் தெரியவருகின்றது.
இதையடுத்து இரண்டாவது மனைவி கணவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளை செருப்பால் அடித்ததாகவும் இதனை அடுத்து கோபம் கொண்ட கணவர் தான் சாப்பிட்டுக்கொண்டிருந்த பீங்கானை வீசியதில் மனைவியின் கழுத்தில் பட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் குறித்த எதிரிக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் 9ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.