புதிய அரசியல் அமைப்பினை தோற்கடிக்கும் நோக்கில் அதற்கு எதிராக நிபந்தனைகள் எதுவுமின்றி எந்தவொரு தரப்புடனும் இணைந்து கொள்ளத் தயார் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நாட்டுக்கு, இனத்திற்கு மதத்திற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதனை தோற்கடிப்பதற்கு எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படத் தயார்.
புதிய அரசியல் அமைப்பினால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து மக்கள் எதிர்ப்பை உருவாக்கும் நோக்கில் பாரிய கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் 7ம் திகதி “நாட்டின் மீது கை வைக்க வேண்டாம்” என்ற தொனிப் பொருளில் நுகேகொடவில் இந்த மாபெரும் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
நாட்டை விற்பனை செய்வதற்கு எதிராகவும் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக நாட்டை பிளவடையச் செய்வதற்கு எதிராகவும் ஒரு அணியாக அனைவரும் திரண்டு இணைந்து கொள்ள வேண்டும்.
வேறு தலைப்புக்கள் பற்றி பேசாது முகநூலில் அரசாங்கத்தின் நாட்டை பிரிக்கும் முயற்சிகள் குறித்து பேச வேண்டுமென ஞானசார தேரர் கோரியுள்ளார்.