சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் பார்லியும் ஒன்று. டயட் இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், இதய கோளாறு உள்ளவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் என அனைவரும் பார்லியை தினமும் கூட சாப்பிடலாம்.
பார்லி உட்கொள்வதால், உடற்சக்தி அதிகரிக்கிறது, இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும், இது சிருநீரத்தின் செயலாற்றலை ஊக்குவித்து செரிமான கோளாறுகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
பார்லியை உட்கொள்வதால், உடற்சக்தி மேம்படுகிறது. மேலும், இது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தவிர்த்து, உடல்பருமன் அதிகரிக்காமலும் பாதுகாக்க உதவுகிறது…
பார்லியில் இருக்கும் தாவர ஊட்டச்சத்துகள் இயற்கையகாவே புற்றுநோய்யை எதிர்க்கும் தன்மை கொண்டதாகும். இது மார்பக மற்றும் ஹார்மோன் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும், இது இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவும் வெகுவாக பயனளிக்கிறது.
பார்லியில் இருக்கும் நியாஸின் உடலில் கொலஸ்ட்ரால் அளவை ஒட்டுமொத்தமாக குறைத்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
பார்லியில் நார்ச்சத்தும் பெருமளவு இருக்கிறது. இது இரத்த கொழுப்பை குறைக்கவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் செய்கிறது. இதனால் உடல் எடைக் குறையவும் பார்லி பயன் தருகிறது.
பார்லியில் இருக்கும் வைட்டமின் சி சத்து உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு வலுவூட்டுகிறது. இதனால், சளி, காய்ச்சல் போன்றவை அவ்வளவாக அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
இதிலிருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தின் அடர்த்தியை சீராக்குகிறது. இதனால் இரத்த சோகை, மயக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் பார்லி சிறுநீரகத்தின் செயலாற்றல் மேம்படவும் பயனளிக்கிறது.
அன்றாட உணவில் பார்லியை சேர்த்துக் கொள்வது பித்தப்பை கற்கள் உண்டாகாமல் உடல்நலத்தை பாதுகாக்கிறது. இதிலிருக்கும் எளிமையாக கரையும் தன்மையுடைய புரதம், பித்தப்பை கற்கள் அபாயத்தை வெகுவாக குறைக்க செய்கிறது.
பார்லியில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்றவை எலும்பிகளின் வலிமையை உறுதியாக்குகின்றன. முக்கியமாக இதிலிருக்கும் பாஸ்பரஸ் எலும்பு மற்றும் பல் சார்ந்த கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.