Loading...
புர்காவுடன் நடமாடிய ஆண் ஒருவரை கொழும்பு – தெஹிவளை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
நேற்றையதினம் தெஹிவளை நகரிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் பிரவேசித்த சந்தேக நபரை நோட்டமிட்ட மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய அவரை அழைத்து விசாரணை செய்தனர்.
Loading...
இதில் புர்காவை அணிந்திருப்பது ஆண் எனத் தெரியவந்ததை அடுத்து உடன் கைது செய்து கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இதன்போது சந்தேகநபரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான தனிப்பட்ட சரீரப் பிணையில் விடுத்த நீதிமன்றம், அங்கொடை மனநோய் வைத்தியசாலையில் பரிசோதனை செய்து அடுத்தவருடம் ஜுன் 10ஆம் திகதி அறிக்கையுடன் நீதிமன்றில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டது.
Loading...