உத்தரபிரதேசத்தின் சம்பாலில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் இரண்டு ஊழியர்கள் பணியை சரியாக செய்யாத காரணத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் வைரலாக ஒரு வீடியோவில் 15 வயது சிறுமியின் கவனிக்கப்படாத இறந்த உடலை ஒரு நாய் நக்கியதைக் காட்டும் வீடியோ மக்களிடையே கோபத்தைத் தூண்டியது.
இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமானது என்று கூறி, மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் (சி.எம்.எஸ்) டாக்டர் சுஷில் வர்மா இன்று வெளியிட்ட ஒரு உத்தவில், கடமையை சரியாகச் செய்யாத ஒரு வார்ட் பாய் மற்றும் ஒரு துப்புரவாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இது குறித்து ஒரு மருந்தாளரிடமும் மருத்துவரிடமும் விளக்கம் கோரப்பட்டதாகவும் கூறினார்.
“விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் குற்றவாளிகள் எனக் கருதப்படும் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அமிதா சிங் தெரிவித்தார். சி.எம்.எஸ் அமைத்த குழுவின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாக்டர் அமிதா சிங் உறுதியளித்தார்.
மருத்துவமனை வட்டாரங்களின்படி, சிறுமி விபத்தில் பலியானார் என்றும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாததாக சிறுமியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். நாய்கள் உடல்களை நக்கிக்கொண்டிருந்தன. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து யாரும் பார்க்கவில்லை என்று அம்ரோஹா மாவட்டத்தில் வசிக்கும் சரண் சிங் தெரிவித்தார்.