முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக டொப் 100 திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இதன் முதல் கட்டமாக அண்மையில் நடைபெற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்படும்.
இந்த தேர்தல்கள் நாட்டில் இடம்பெற்ற மிகவும் ஊழல் மோசடிகள் மிக்க தேர்தலாகும்.
கூட்டுறவுச் சங்க உறுப்பினர் இணைப்பு தேர்தல் நடாத்துதல் முறைமைகளில் மோசடி இடம்பெற்றுள்ளது.
இந்த மோசடிகளுக்கு கூட்டுறவுச் சங்கத் தலைர்கள் ஆணையாளர்கள் உள்ளிட்டவர்கள் பொறுப்பு சொல்ல வேண்டும்.
போலி உறுப்பினர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
இது மஹிந்த ராஜபக்ச முறையின் அடிப்படையில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இதற்கு எதிராக நீதிமன்றின் உதவி நாடப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.