ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ், கைதிகள் ஒரு குழுவினரை விடுவிக்கும் பணியைத் சிறைச்சாளைகள் திணைக்களம் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை நிர்வாகம் – புனர்வாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டு ஆணையர் சந்தன ஏகநாயக்க கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 600 கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சிறிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு ஜனாதிபதி மன்னிப்பு பெற தகுதியுள்ள கைதிகளின் பெயர்களை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.
இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து எழுந்த கவலைகள் காரணமாக இந்த குழு விடுவிக்கப்பட உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
கைதிகளின் குற்றங்கள் மற்றும் தகுதிகளை மதிப்பாய்வு செய்த பின்னர் சிறைச்சாலைத் திணைக்களம் கைதிகளை விடுவிக்கத் தொடங்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.