தமிழகத்தில் மூன்று நண்பர்களை தலையில் கல்லை போட்டுக்கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் காலேஜ் ரோட்டிலுள்ள குடியிருப்பில் பனியன் நிறுவன தொழிலாளிகள் இருவர் ஓரே அறையில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.
இந்நிலையில் நவம்பர் முதல் வாரம், அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதுபற்றி அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், வீட்டை சோதனையிட்டனர்.
அங்கே சிமெண்ட் தொட்டிக்குள் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இறந்து கிடந்தவர் தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிமுத்து என்பதும் அவருடன் தங்கிருந்த மதுரையை சேர்ந்த சங்கர் என்பவர் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து சங்கரின் செல்போனை ஆய்வு செய்த போலீசார், கடைசியாக அவரிடம் பேசியது யார் என கண்டறிந்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் மதுரை நடந்த கொலை வழக்கில், சங்கர் மாட்டியது தெரியவந்தது.
இதனையடுத்து திருப்பூர் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2018-ல் கங்காநகர் பகுதியில் உடன் தங்கியிருந்த நண்பருடன் ஏற்பட்ட தகராறில் அவரது தலையில் கல்லைப்போட்டு சங்கர் கொலை செய்தது தெரியவந்தது.
அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கர், 90 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்துள்ளார். அதனை தொடர்ந்து இசக்கிமுத்துவுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு ஒரே அறையில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இசக்கிமுத்துவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை கொலை செய்து அந்த சடலத்துடன் ஒரு வாரம் அதே அறையில் தங்கியுள்ளான்.
இதேபோன்று மற்றொரு நண்பரான அன்பரசுவை கொலை செய்த குற்றவாளிக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் மூன்று பேரையும் கொலை செய்ததை சங்கர் ஒப்புக்கொண்டதால், அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்