இத்தாலி நிறுவனம் உருவாக்கியுள்ள உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையின் விலை மட்டும் ரூ.53 கோடியாம்.
இத்தாலியை சேர்ந்த ‘போரினி மிலானேசி’ என்ற நிறுவனமே இந்த கைப்பையை தயாரித்துள்ளது.
பளபளக்கும் முதலை தோலால் செய்யப்பட்டுள்ள, இந்த பையில் 10 தங்க பட்டாம்பூச்சிகள் பதிக்கப்பட்டுள்ளதாம்.
இந்த பட்டாம்பூச்சிகளில் வைரங்கள், அரிய வகை ரத்தினங்கள் பதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளதாம்.
இதேபோன்று 3 கைப்பைகளை உருவாக்கியுள்ளதாகவும், ஒவ்வொரு பையை உருவாக்கவும் ஆயிரம் மணிநேரம் செலவானதாகவும் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், மட்காத பிளாஸ்டிக்குகளால் மாசுபடும் கடல்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கைப்பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் கிடைக்கும் பணத்தில், ரூ.7 கோடி கடல்களை தூய்மைப்படுத்த வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.