தங்கள் மகனை 15 மணி நேரம் கடும் குளிரில் நிற்கவைத்தும், பெற்ற மகளை தவறாக துன்புறுத்திய பெற்றோரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பெல்ஜியம் நாட்டின் Brussels நகரில் 31 வயதான பெண்மணி ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு ஆறு வயதில் ஒரு ஆண் பிள்ளையும், அவனின் இரட்டை பிறப்பான ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.
தனது முதல் கணவரை பிரிந்திருக்கும் இந்த பெண்மணி இரண்டாவதாக 21 வயதான வேறு ஒரு நபரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
இந்த இரண்டு பிள்ளைகளும் முதல் கணவருக்கு பிறந்தவர்கள் ஆவார்கள்.
சம்பவதன்று தங்கள் அனுமதியில்லாமல் சிறுவன் சமையலறையிலிருந்து சாப்பாட்டை எடுத்து சாப்பிட்டான் என கோபமடைந்த அவன் பெற்றோர் அவனை வெறும் உடம்பில் கடும் குளிரில் 15 மணி நேரம் வீட்டில் பால்கனியில் நிற்கவைத்துள்ளனர்.
இதில் வெப்பகுறைபாடு மற்றும் ஊட்டசத்தின்மை காரணமாக மயக்கமான அவனை கண்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
தற்போது கவலைகிடமான நிலையில் அவன் உள்ளான்.
அதே போல அந்த சிறுவனின் சகோதரியும் தவறான உடல் தொல்லைக்கு ஆளாகி வீட்டில் மயங்கி கிடந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனிடையில் இந்த கொடும் செயலை செய்த அந்த பெற்றோரை பொலிசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.