திருகோணமலை, மொரவெவ பகுதியில் கத்திக்குத்திற்கு இலக்கான இளைஞன் ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மெரவெவ, 4ஆம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த உதயகுமார் தினேஷ்குமார் (28) என்பவரே இன்று மாலை கத்திக்குத்திற்கு இலக்கானார்.
“எனது மாமியார் வீட்டுக்கு சுரேஷ் என்பவர் அடிக்கடி வந்து சென்றார். அங்கு வர வேண்டாமென அவரிடம் பலமுறை கூறினேன். அதை பொருட்படுத்தாமல் அவர் வந்து சென்றார். இது பற்றி நான் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளேன்.
இன்று மாலை மனைவியுடன் வேலை செய்யுமிடத்திற்கு சென்றபோது, சுரேஷ் என்னை கத்தியால் குத்தினார்“ என வாக்குமூலமளித்துள்ளார்.
கத்திக்குத்திற்குள்ளான நபர் மொரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.