2017ம் ஆண்டில் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுமா இல்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மாத்திரமே தீர்மானிக்க முடியும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியால் ஆட்சி மாற்றம் குறித்து தீர்மானிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017ம் ஆண்டில் அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இருக்கும் வாக்கு வங்கி தேசிய தேர்தல் ஒன்றில் வெற்றி பெற போதுமான வாக்கு வங்கியல்ல எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், கருத்து வெளியிட்டிருந்த மகிந்த ராஜபக்ச அடுத்த ஆண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது நோக்கம் என கூறியிருந்தார்.