அதிமுக எம்.எல்.ஏ.க்களின் இன்றைய கூட்டத்தில் சசிகலாவை முதல்வராக தேர்வு செய்ய ஆதரவு தரும் கடிதம் பெறப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ள சசிகலா நடராஜன் தமிழக முதல்வராக ஜனவரி 12-ந் தேதியன்று பொறுப்பேற்கக் கூடும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா நடராஜனை அதிமுக பொதுச்செயலராக அக்கட்சியின் பொதுக்குழு நியமித்துள்ளது. இந்த நிலையில் ஆட்சியும் தற்போது சசிகலா வசம் போகிறது.
சென்னையில் திடீரென அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் சசிகலா முதல்வராவதற்கு ஆதரவு கையெழுத்து எம்.எல்.ஏ.க்களிடம் பெறப்படுகிறது.
இதன்பின்னர் ஜனவரி 12-ந் தேதியன்று முதல்வராக சசிகலா பொறுப்பேற்பார் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
இதனிடையே சசிகலாவின் கணவர் நடராஜன் முதல்வராகப் போகிறார் என பரவிய தகவலால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.