தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்பு, அவர் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தி அப்பல்லோ மருத்துவமனைக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதில், மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக புரோப்பிடன் 75 மில்லி கிராம் மருந்தை ஜெயலலிதா எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மருந்தை ஜெயலலிதா எடுத்துக் கொண்டாரா, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட, பயோகிளிட்டசோன், ரொசிகிளிப்டஜொன் போன்ற மாத்திரைகள் அவருக்குக் கொடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
புரோப்பிடனும் பயோகிளிட்டசோனும் இருதயத் துடிப்பை பாதிக்கும் என மருத்துவ ஆய்வுகளில் தெளிவாக உள்ளது என்றும் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த தவறான மாத்திரைகள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒருவருக்கு புரோப்பிடன் கொடுத்தாலே இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படும் என்று அப்போலோ மருத்துவமனையின் மின்னஞ்சல்களில் இந்தத் தகவல் கசிந்துள்ளது என அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது என மருத்துவர் கூறியுள்ளார்.