திருகோணமலை – மூதூர் பகுதியில் 3 சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஒருவருக்கு 20 வருட கால கடூழிய சிறைத்தண்டனையினை நீதிபதி இளம் செழியன் விதித்துள்ளார்.
இந்த சம்பவம் திருகோணமலை – மூதூர் பகுதியில் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளில் இருவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்ந்த நிலையில் சந்தேகநபருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன் சந்தேக நபருக்கு 20 வருட கால கடூழிய சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 10 இலட்சம் ரூபா நஷ்ட்டஈடு விதிக்கப்பட்டுள்ளது.
நஷ்ட்ட ஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 4 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
குற்றவாளிக்கு 20,000 ரூபா தண்டப்பணத்தை விதித்துள்ள நீதிபதி, அதனை செலுத்த தவறும் பட்சத்தில் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிரதிவாதியிடம் மேற்கொள்ளப்பட்ட உயிரணு பரிசோதனை மற்றும் சாட்சியங்களூடாக அனைத்துக் குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மூதூர் பகுதியில் அதிகளவான பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.