இலங்கையைக் சென்ற புரவி புயல் கடந்து சென்றுள்ள நிலையில் நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
எனினும் எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்கு கடுங்காற்று மற்றும் மழை வீழ்ச்சி பதிவாகுமெனவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி புரவி சூறாவளியானது இலங்கையின் வடகிழக்கு கரையில் குச்சவெளிக்கும் திரியாயிக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்றிரவு ஊடறுத்து சென்று உள்ளே மையம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த காற்று வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்ம் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.