Loading...
நிவர், புரெவி என காற்றழுத்த தாழமுக்கங்கள் புயலாக மாறிய நிலையில், நாளை தினம் அந்தமான்தீவுக்கு அருகில் மற்றுமொரு புதிய காற்றழுத்த தாழமுக்கம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழமுக்கம் படிப்படியாக வலுவடைந்து கடந்த செவ்வாய் கிழமை இரவு புரெவி புயலாக மாறி வலுவடைந்தது.
Loading...
இலங்கையில் மையம் கொண்டிருந்த புயல் நேற்றிரவு கரையை கடந்தது.
இந்த நிலையில், புரெவி புயல் பலத்த காற்றுடன் தமிழகத்தின் பாம்பனை நெருங்கி வருவதுடன் இன்று இரவு கரையை கடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில், நாளைய தினம் புதிய காற்றழுத்த தாழமுக்கம் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...