தமிழ்நாட்டில் உள்ள திருச்சி மாவட்டத்தில் குறைதீர்ப்புக் கூட்டத்தில் விவசாயிகள் எலிக்கறி தின்று போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் விவசாயம் செய்யும் பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகி வரும் சூழல் நிலவுகிறது.
கடன் தொல்லையாலும், தங்கள் நிலம் கருகுவதை காணமுடியாமலும் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும், மாரடைப்பால் மரணம் அடைவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அப்போது தாங்கள் அனுபவிக்கும் துன்பத்தை குறிக்கும் வகையில் எலிக்கறியை வாயில் வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
விவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ,தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவேண்டும் மற்றும் விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அப்போது அவர்கள் வலியுறித்தினார்கள்.