உயர் இரத்த அழுத்தம், உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் பொதுவான வாழ்க்கை முறை நோயாகும்.
இன்று ஏராளமான மக்கள் இந்த பிரச்சனையை அனுபவித்து வருகின்றனர்.
ஒருவரது சாதாரண இரத்த அழுத்த வரம்பு 120/80 mmHg ஆகும். ஆனால் ஒருவரது இரத்த அழுத்த அளவு 140/90 mmHg-க்கு அதிகமாகும் போது, அது உயர் இரத்த அழுத்த பிரச்சனையின் கீழ் வரும் என்று கூறப்படுகிறது.
உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சிக்காவிட்டால், அது மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களுக்கு வழிவகுத்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
அதில் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும் ஒன்று தான் சியா விதை. இதனை எலுமிச்சை ஜூஸில் சேர்த்து குடிப்பது ஆரோக்கியமானதாகும்.
இந்த சிறிய விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியுள்ளன. நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் பல நுண் ஊட்டச்சத்துக்களைக் கொண்ட சியா விதைகளை அன்றாட உணவில் பலவாறு சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால், இது இரத்தத்தை மெலிதாக்கி, இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி புரியும்.
இப்போது இதனை எலுமிச்சை ஜூஸில் சேர்த்து பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
பானம் தயாரிக்கும் முறை
- உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இந்த பானத்தைத் தயாரிப்பது மிகவும் எளிது. சியா விதைகளை ஒரு கப் நீரில் போட்டு 1 மணிநேரத்திற்கும் குறைவாக ஊற வைக்க வேண்டும்.
- பின் அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து கொள்ள வேண்டும்.
- அதன் பின் வேண்டுமானால் சுவைக்காக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
- இந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
நினைவில் கொள்ள வேண்டியவை
உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு இந்த பானத்தைக் குடிக்கும் போது, நீங்கள் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவராயின், இந்த பானத்தைக் குடிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் சியா விதைகளும் இரத்தத்தை மெலிதாக்கும் திறன் கொண்டவை. எனவே இதில் கவனமாக இருங்கள்.