Loading...
கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டுப் பார்வையில் அமைந்துள்ள புண்ணியத்தலம் திருச்செந்தூர் அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்.
இந்த ஆலயத்தில் மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது. அதாவது சில கோவில்களில் கருவறை மூலவரை, சூரியக் கதிர்கள் வழிபடும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும். அது குறிப்பிட்ட ஓரிரு நாட்கள் மட்டுமே இருப்பது வழக்கம்.
Loading...
ஆனால் உவரி சுயம்பு லிங்க சுவாமி ஆலயத்தில், மார்கழி மாதம் வரும் 30 நாட்களும், காலை 6.45 மணிக்கு சூரியக்கதிர்கள் சுயம்புலிங்கத்தின் மீது விழுவது அற்புதமாகும். சுயம்பு லிங்கத்தை, சூரியன் வணங்கும் நிகழ்ச்சி இன்றும் நடைபெற்று வருகிறது. அதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பர்.
Loading...