Loading...
கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று ஒருவர் உயிரிழந்திருக்கும் நிலையில், வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 130 ஆக அதிகரித்திருக்கிறது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் தகவலின்படி மேற்குறிப்பிட்ட நபர் பிலியந்தலையை சேர்ந்த 72 வயதான ஆணொருவராவார்.
அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதையடுத்து, தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இன்றைய தினம் உயிரிழந்திருக்கிறார்.
Loading...
அத்தோடு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் புதிதாக 517 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
எனவே தற்போது தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 26,559 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...