பணத்தாள்களை பயன்படுத்திய உடன் கைகளை நன்கு கழுவுமாறு இலங்கை அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பணத்தாள்களில் நீண்ட நாட்கள் வாழக் கூடும் என்பதனால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் வீட்டில் உள்ளர்கள் அனைவரும் பணத்தாள்களை பயன்படுத்துவதனை தவிர்க்க வேண்டும். வீட்டில் ஒருவர் அல்லது இருவர் மாத்திரம் பணத்தாள்களை பயன்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
பணம் பயன்படுத்தும் போது உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய ஒளி படும் இடங்களில் பணத்தை வைப்பதன் மூலம் வைரஸ் விரைவில் அழிந்து போய்விடும் என அவர் கூறியுள்ளார்.
முடிந்தளவு பண கொடுக்கல் வாங்கலைக் குறைத்துக் கொண்டு ஒரே முறையில் பணத்தை செலுத்துவது பொருத்தமானதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் பணக் கொடுக்கல் வாங்களின் பின்னர் கைகளை கழுவுவது மிகவும் முக்கியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.