இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை துரித உணவுகளுக்கு அடிமையாகின்றனர், அதிலும் குறிப்பாக 2 நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ் தான் பலரது உணவே.
ஆனால் நூடுல்ஸ் அதிகமாக உட்கொள்பவர்கள் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றார்களாம்.
மைதாவாலான நூடுல்ஸில் மோனோசோடியம் க்ளுட்டமேட்என்னும் அடிமையாக்கும் ப்ளேவர்கள் நிறைந்துள்ளது.
இத்தகைய நூடுல்ஸை ஒருவர் உட்கொண்டால், அது உயர் இரத்த அழுத்தம், தலைவலி மற்றும் குமட்டல் போன்றவற்றை உண்டாக்கும், மேலும் இதய நோய்க்கும் வழிவகுக்கும்
அதுமட்டுமல்லாது பிசுபிசுவென இருக்கும் நூடுல்ஸ் உங்களுட்புற உடல் உறுப்புகளோடு ஒட்டிக் கொள்ளும். இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் அளவுக்கு அதிகமான நீர் வெளியேற்றம் போன்ற பல உபாதைகள் ஏற்படும்.
அளவுக்கு அதிகமாக மேகியை உட்கொண்டால் கொலஸ்ட்ரால் மற்றும் இதய பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் இதய குழாய்களிலும், தமனிகளிலும் அடைப்பு ஏற்படலாம்.
நூடுல்ஸை அடிக்கடி சாப்பிட்டால், அது மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, அதன் விளைவாக மலக்குடல் புற்றுநோய் வர வழி வகுக்கும்.