Loading...
வவுனியாவில் அடையாள உண்ணாவிரதம் ஒன்றினை முன்னெடுத்திருந்தவர்கள் போராட்டம் முடிவடையும் நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் படத்தை தீயிட்டு எரித்துள்ளனர்.
வவுனியாவில் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒன்றிணைந்து இன்று (30) காலை அடையாள உண்ணாவிரம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
Loading...
குறித்த உண்ணாவிரதம் இன்று மாலை 4 மணியளவில் முடிவுக்கு வந்த நிலையில் சம்பந்தனின் புகைப்படத்தினை தாங்கி பேரணியாக சென்று இறுதியில் படத்தினை எரியூட்டி விட்டுள்ளனர்.
மேலும் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் உறவுகளை நினைத்து கதறி அழுததையும் காணக்கூடியதாக இருந்தது.
Loading...