இன்றைய கால கட்டத்தில் ஒரு படம் ஒரு வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினாலே போதும். போட்ட பணம் கிடைத்துவிடும். அதுதான் படத்தின் வெற்றி என்று ஆகிவிட்டது. இரண்டு வாரங்களை கடந்து விட்டால் மிகப்பெரிய வெற்றி.
பல படங்கள் பல தியேட்டர்களில் ஓடும் காலம் இருந்தது. இந்த காலம் மாறி ஒரு படமாவது 100 நாள் ஓடுமா? என்ற நிலை உருவாகி இருக்கிறது. அப்படி ஓடினாலும் அது தினமும் ஓரு காட்சி ஓடும் படமாகவே உள்ளது.
இந்த 2016-ம் ஆண்டு 200-க்கும் மேற்பட்ட படங்கள் திரைக்கு வந்து இருக்கின்றன. இவற்றில் விரல்விட்டு எண்ணும் படியான படங்களே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. ஒன்றிரண்டு படங்கள் 100 நாட்களை தொட்டிருக்கின்றன.
ஆனால், ரஜினியின் ‘கபாலி’ படம் மட்டும்தான். சென்னையில் 3 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்தது. மதுரையில் ஒரு திரை அரங்கில் 150 நாட்களை தாண்டி ஓடியது.
நூறுநாட்கள், ஓடிய படங்கள் பட்டியலில் ‘தெறி’, ‘இறுதிச்சுற்று’, ‘ரஜினிமுருகன்’, தற்போது ‘தர்மதுரை’ படங்கள் இடம் பெற்றுள்ளன.