எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் பயண கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் தொடர்பான பிரதி சுகாதார சேவை இயக்குனர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகர எல்லையினுள் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகயை விரைவுபடுத்த PCR பரிசோதனைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் எங்களுக்கு பயண கட்டுப்பாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதற்கு சட்டத்தை செயற்படுத்துவதற்கு பதிலாக நாங்கள் அனைவரும் இணைந்து பயணங்களை குறைப்பது அவசியமாகும்.
சுகாதார அமைச்சின் கொழும்பு நகர சபையின் தலைமையில் பரிசோதனைகள் அனைத்தும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கூடிய விரைவில் கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.