அன்றாட சமையலுக்கு பயன்படும் ஒரு முக்கிய உணவு பொருள் தான் வெங்காயம்.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. மேலும் வெங்காயம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தினை வழங்குகிறது.
இது பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.
அதைபோல் தான் வெங்காய தோல்களில் கூட பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.
அதுமட்டுமின்றி பல புற்றுநோய் வரை நீரழிவு வரை நோய்களுக்கு தீர்வாக இருக்கின்றது.
அந்தவகையில் தற்போது வெங்காய தோலினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- வெங்காயத்தின் தோலில் உள்ள ஆற்றல்மிக்க நிறமியான க்யூயர்சிடின், தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், சக்தி வாய்ந்த மயக்க மருந்து பண்புகள் உள்ளன மற்றும் தூக்கமின்மையை சரிசெய்யும்.
- வெங்காயத் தோலில் ஆற்றல் மிக்க ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன.
- வெங்காயத்தின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையை உள்ளடக்கிய க்யூயர்சிடின், புற்றுநோய்க்கு காரணமான செல்களை அழித்து, புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
- வெங்காயத்தின் தோலில் இருக்கும் கரையாத நார்ச்சத்து, குடலியக்கத்தின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
- வெங்காயத் தோலில் உள்ள கரையாத நார்ச்சத்து பெருங்குடலில் தேங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும், pH அளவை சீராக பராமரிக்கும்.
- டைப்-2 நீரிழிவு, இதய நோய்கள், இரையக குடலிய பிரச்சனைகள், உடல் பருமன், குடல் புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை கூட குறைக்கும்.
எப்படி வெங்காயத் தோலை உட்கொள்ளலாம்?
வெங்காயத்தின் தோலை ஸ்டீயூவ் வடிவிலோ, சூப் வடிவிலோ அல்லது தேநீர் வடிவிலோ எடுக்கலாம்.
முதலில் வெங்காயத்தின் தோலை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் கொதிக்கும் நீரை ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் கழித்து, அந்நீரை வடிகட்டி, தேன் கலந்து, இரவில் படுக்கும் முன் ஒரு கப் குடிக்க வேண்டும்.
குறிப்பு
வெங்காயத் தோலை கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பயன்படுத்தக்கூடாது.