ரஷ்ய போர் விமானமான SU-30 கருங்கடல் மேற்பரப்பில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உளவு விமானத்தை தடுத்து நிறுத்தி விரட்டியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் படி, டிசம்பர் 7 ஆம் தேதி, ரஷ்ய ராடார்கள் கருங்கடல் மேற்பரப்பில் ரஷ்ய எல்லையை நெருங்கும் விமானங்களை கண்டறிந்தன.
விமானங்களை அடையாளம் காணவும், ரஷ்ய எல்லையை மீறுவதைத் தடுக்கவும், SU-30 போர் விமானம் தெற்கு இராணுவ மாவட்டத்தின் விமானப் படையிலிருந்து புறப்பட்டது.
ரஷய் எல்லைக்குள் நுழைய முயன்றது அமெரிக்க விமானப்படையின் RC-135 உளவு விமானம், KS-135 எரிபொருள் நிரப்பும் விமானம் மற்றும் பிரான்ஸ் விமானப்படையின் C.160G உளவு விமானம் என ரஷ்ய போர் விமானத்தின் குழுவினர் அடையாளம் கண்டனர்.
பின்னர் விமானங்கள் ரஷ்ய எல்லைக்குள் நுழைவதை தடுத்து நிறுத்தி கருங்கடல் வழியாக திரும்பி அனுப்பினர் என்று தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு இராணுவ விமானங்கள் எல்லையிலிருந்து விலகியதை அடுத்து ரஷ்ய போர் விமானம் விமானநிலையத்திற்கு திரும்பியது என தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தது.